×

ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு

புதுடெல்லி: 2026-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி திரைப்படமான ஹோம்பவுண்ட்’ அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்’மசான்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நீரஜ் கய்வான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதத்தையும் சாதியையும் கடந்த ஒரு புனிதமான நட்பையும், அதே சமயம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் இத்திரைப்படம் உலகிற்கு உரக்கச் சொன்னது. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இறுதிப் பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் ஹோம்பவுண்ட் இடம் பிடித்துள்ளது. இதில் மொத்தம் 15 வெளிநாட்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.

Tags : New Delhi ,India ,2026 ,2020 COVID- ,lockdown ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பை கருத்தில்...