தர்பங்கா: பீகாரில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி அங்கு, முக்யமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் பெண் தொழில்முனைவோரின் வங்கி கணக்குகளில் ரூ.10,000 பணம் செலுத்தப்பட்டது.
ஆனால் தவறுதலாக 3ஆண்களுக்கு ரூ.10,000 சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
பணத்தை திரும்ப செலுத்துமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர். பணம் பெற்ற நாகேந்திர ராம் கூறும்போது, “நான் அந்த பணத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் என் கணக்கில் அரசு ரூ.10,000 அனுப்பியது. மாற்றுதிறனாளியான நான் அந்த பணத்தை சத்பூஜை, தீபாவளிக்காக எடுத்து செலவு செய்து விட்டேன். அதை இப்போது என்னால் தர முடியவில்லை” என்றார். இதேபோல் பணம் பெற்ற மற்ற இருவரும் கால்நடைகளை வாங்க அந்த பணத்தை பயன்படுத்தி விட்டதால் பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, பணம் பெற்ற மூன்று பேரும், தங்களை மன்னித்து, பணத்தை தள்ளுபடி செய்யுமாறு முதல்வர் நிதிஷ் குமாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
