மதுரை: மதுரை எல்ஐசியின் கிளை அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயானது வேகமாக பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி(55) பரிதாபமாக பலியானார். இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஏசி, கணினி, ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமாகின. போலீஸ் விசாரணையில், மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.
