நீலகிரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என வனத்துறை தெரிவித்துள்ளது.
