சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைந்தது. இந்த நிலையில் செய்தியாளர் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
16% பொருளாதார வளர்ச்சி – சாதித்த தமிழ்நாடு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழ்நாடு சாதனை
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.
பொருளாதார மதிப்பு ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு
2023-24ல் தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25ல் 16 சதவீத வளர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை பெரும் உதவி
வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை மிகுந்த உதவி செய்துள்ளது. சேவைத்துறை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. நாட்டின் சேவைத்துறையில் தமிழ்நாட்டு சேவைத்துறையின் பங்களிப்பு 11.3 சதவீதமாக உள்ளது. மராட்டிய மாநிலத்தையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம்.
உற்பத்தித் துறையில் தமிழ்நாடு பெரிய முன்னேற்றம்
உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.
4 ஆண்டுகளில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கடந்த 4 ஆண்டுகளில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்னணு பொருட்களின் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளாகவே உயர் வளர்ச்சி விகிதத்தை அடைந்து வருகிறது.
நிதிப்பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது
நிதிப்பற்றாக்குறையை நிதி மேலாண்மைக்கு உட்பட்டுதான் கையாண்டு வருகிறோம். 2025-26ம் நிதியாண்டில் மாநில நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும்.
ஒன்றிய அரசின் மசோதாவால் நிதிச்சுமை அதிகரிக்கும்
100 நாள் வேலை திட்ட புதிய மசோதாவில் தமிழ்நாட்டுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை குறைத்து வருகிறது. வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை மிகுந்த உதவி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்
