மாங்கோல் போரே: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுளும் உரிமை கோருகின்றன. இந்த பிரச்னையால் கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கம்போடியா வீரர் உயிரிழந்தார். இதையடுத்து 2 நாடுகள் இடையே போர் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று தாய்லாந்து ராணுவத்தின் எப்- 16 போர் விமானங்கள் கம்போடியாவில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஒரு பாலம் சேதமடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் 12க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
