ஸ்ரீகாளஹஸ்தி, : கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும் என அமைச்சர் சவிதா பேசினார். திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய கைவினைப்பொருட்கள் வாரவிழா நடந்து வருகிறது.
இந்நிலையில் கைவினைஞர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சவிதா மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல சுதீர்ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கைவினை பொருட்கள் நிறைந்த அரங்கங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பேசியதாவது: அரசு வழங்கும் புதிய உபகரணங்களுடன் கைவினைஞர்கள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெற்று சுதந்திரமாக வியாபாரம் செய்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் புதிய உபகரணங்களை கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர அண்மையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தேசிய விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மத்திய, மாநில அரசுகள் கைவினைஞர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
அரசு சார்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைவினைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி கூடங்கள், தயாரிப்புகளை விரிவுபடுத்த சந்தைப்படுத்தும் வசதி ஆகியவற்றை விரைவில் மேற்கொள்ளப்படும்.
கைவினைஞர்களுக்கு நிதி பாதுகாப்புடன் கூடிய வாழ்க்கையை வழங்கும் நோக்கத்துடன் மாநில அரசு செயல்படுககிறது. உள்நாட்டு கைவினை பொருட்களின் தயாரிப்பு மூலம் ஒவ்வொருவரும் இந்திய பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதுபோன்ற ஆரோக்கியமான நிலையால் உள்நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும். இவ்வாறு பேசினார்.இந்த விழாவில் ஏராளமான அரசு அதிகாரிகள் உட்பட கைவினை தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
