டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது. ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
