டெல்லி : 2024-2025ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு இடையிலான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 16% வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. தொழிற்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் தொடர் ஓட்டத்தால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஆண்டு பண மதிப்பு, ஜிஎஸ்டிபி அதாவது மாநில உள் உற்பத்தி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 -2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி புள்ளி விவர கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதம் தமிழ்நாடு முதலிடம்
மாநிலம் – உற்பத்தி வளர்ச்சி
தமிழ்நாடு – 16.0%
கர்நாடகா – 12.8%
உ.பி – 12.7%
மகாராஷ்டிரா- 11.7%
குஜராத்- 10.2%
மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு
மாநிலம் -உற்பத்தி மதிப்பு
மகாராஷ்டிரா -ரூ. 45.31 லட்சம் கோடி
தமிழ்நாடு – ரூ.31.18 லட்சம் கோடி
உ.பி -ரூ. 29.78 லட்சம் கோடி
கர்நாடகா – ரூ.28.83 லட்சம் கோடி
குஜராத் – ரூ.26.72 லட்சம் கோடி
மாநிலங்களின் தனி நபர் வருமானம்
மாநிலம் – தனிநபர் வருமானம்
கர்நாடகா – ரூ. 3.80 லட்சம்
தமிழ்நாடு – ரூ. 3.61 லட்சம்
குஜராத் – ரூ. 3.31 லட்சம்
மகாராஷ்டிரா – ரூ.3.09 லட்சம்
உ .பி.- ரூ.1.08 லட்சம்
