×

சுரங்கம், துறைமுகங்கள் உள்பட பல்வேறு துறைகள் ரூ.12 லட்சம் கோடி முதலீடு: தொழிலதிபர் கவுதம் அதானி அறிவிப்பு

தன்பத்: அதானி குழுமம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக கவுதம் அதானி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடி(ஐஎஸ்எம்) தனது நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதானி குழுமங்களின் தலைவர் தொழிலதிபர் கவுதம் அதானி கலந்து கொண்டார். அப்போது பேட்டி அளித்த கவுதம் அதானி, “இந்தியாவில் பெரிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. தன்னம்பிக்கையை அடைவதற்கான போராட்டம் தொடர்கிறது. பிரதமர் மோடி இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

அடுத்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2031ம் ஆண்டுக்குள் அதானி குழுமம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய உள்ளது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றில் கணிசமான முதலீடுகள் செய்யப்படும்” என்று கூறினார். அதானி குழுமம் மற்றும் அவரது குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கவுதம் அதானி, “இவை தொழிலின் ஒருபகுதி . இந்திய தொழில்துறை இன்று என்னை தேசத்தை கட்டி எழுப்புவதில் ஒரு பங்குதாரராக பார்க்கிறது” என தெரிவித்தார்.

Tags : Gautam Adani ,Dhanbad ,Adani Group ,IIT ,ISM ,Dhanbad, Jharkhand ,Adani Group… ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள...