இஸ்லாமாபாத்: தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா, பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடியின் 351 சிக்சர் உலக சாதனையை முறியடித்திருந்தார். அதுகுறித்து, மவுனம் காத்து வந்த அப்ரிடி, நேற்று அளித்த பேட்டி ஒன்றில், ‘விராட் கோஹ்லியும், ரோகித் சர்மாவும், இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். அவர்களால், 2027 உலகக் கோப்பை போட்டிகள் வரை நிச்சயம் ஆட முடியும். சாதனைகள் என்றாவது ஒரு நாள் முறியடிக்கப்பட்டே தீரும். அதுதான் கிரிக்கெட். ரோகித்தின் பேட்டிங் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது’ என கூறியுள்ளார்.
