×

ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகுள் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவு!!

ஹைதராபாத்: தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கிய சாலைக்கு ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு தெலங்கானா அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் ரவிர்யாலாவில் நேரு வெளிவட்டச் சாலையை இணைக்கும் புதிய க்ரீன்பீல்டு சாலைக்கு, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. முன்னதாக ரவிர்யாலா மாற்று சாலைக்கு ‘டாடா இண்டர்சேஞ்ச்’ என்று பெயர் மாற்றப்பட்டது. கூகுள் நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக, ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு ‘கூகுள் தெரு’ என்று பெயரிடப்பட இருக்கிறது. அதேபோல, மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வைப்பது தொடர்பாக தெலங்கானா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Tags : US ,President Trump ,Ratan Tata ,Telangana Government ,Hyderabad ,US President Trump ,Telangana ,Chief Minister ,Revand Reddy ,USISPF conference ,Delhi ,
× RELATED வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி...