எஸ்ஐஆர் பணியில் இருந்த பேராசிரியர் மரணம்

 

காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் காசியாபாத்தில் அறிவியல் மற்றும் வணிக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய லால் மோகன் சிங், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் மோடிநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் கல்லூரியின் முதல்வர் சதீஷ் சந்த் அகர்வால் கூறுகையில், ‘‘சிங் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணி மேற்கொண்டதன் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். பணியை முடிக்க வேண்டும் என்று நிர்வாகம் என்று நிர்வாகம் எச்சரித்து இருந்தது. அவர் மன அழுத்தத்துடனே பணிபுரிந்தார்.

Related Stories: