திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை இன்று நடந்தது. இதில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர், மருதுபாண்டியர் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளிக் கவசம் வழங்கினார். இதை தொடர்ந்து நிருபர்களிடம் அவரிடம், நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், `விஜய்யுடன் கூட்டணி என்று கேட்கிறீர்கள்.

எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பதில் சூறாவளி, புயல் அடிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, தமிழக மக்கள் நலன் கருதி அதிமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரிந்துகிடப்பதால், 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: