முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தஞ்சை அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் தங்கம் வென்று அசத்தல்

தஞ்சாவூர், அக் 12: தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தஞ்சை பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 7 பேர் மாநில அளவிலான வாலிபால் போட்டிக்கு தேர்வு பெற்றனர். சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் 7 பேர் முதல் பரிசு வென்று தங்கம் பதக்கத்துடன் பள்ளி திரும்பினர். பள்ளி வந்த மாணவிகளுக்கு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து. இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா ரூ.75 ஆயிரம் அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: