பவானி-சித்தோடு சாலை சீரமைப்பு

ஈரோடு,ஆக.14: தினகரன் செய்தி எதிரொலியாக, சித்தோடு ஆவின் பால் பண்ணை அருகேயுள்ள நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையோரத்தில் மண்ணுக்கு அடியில்,காலிங்காரயன்பாளையத்தில் இருந்து பெருந்துறைக்கு குடிநீர் குழாய் செல்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சித்தோடு ஆவின் பால் பண்ணை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜேசிபி வாகனத்தின் மூலம் குழி தோண்டப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கப்பட்டது.

இருப்பினும் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், சாலை சரியாக மூடாமல் விடப்பட்டது. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. இதுகுறித்து சமீபத்தில் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை சீரமைத்தனர்.

 

Related Stories: