கேட்பாரற்று கிடந்த கஞ்சா சாக்லேட்கள்

ஈரோடு, ஜன. 7: ஈரோடு ரயில் நிலையப்பகுதியில் உள்ள ரயில்வே காவல் நிலையம் அருகில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் வருவோரை தடுத்து நேற்று முன்தினம் ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள மோட்டர் அறை அருகில் சுமார் அரை கிலோ அளவிலான 112 கஞ்சா சாக்லேட்டுகள் கிடப்பது தெரியவந்தது. அவற்றை யார் கடத்தி வந்தார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவற்றை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: