அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய சுகாதார வளாகம் அமைக்க பூமிபூஜை

 

 

அந்தியூர், ஜன.6: அந்தியூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் தற்போது கட்டப்பட்டுள்ள நிலையில் புதிய சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், ரூ.18 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்து சுகாதார வளாகம் கட்டும் பணிக்களை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.
இதில், பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், யாஸ்மின் தாஜ், கவிதா, ராமர் உள்பட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: