அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

 

ஈரோடு, ஜன. 6: அரசுப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று காலை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
கடந்த டிச.23ம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்று முன்தினம் முடிவடைந்து நேற்று காலை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து 3ம் பருவத்துக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் எண்ணும் எழுத்து பயிற்சி கையேடுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

Related Stories: