×

ஒரு படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு: ஆர்ஜே பாலாஜி

சென்னை: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சானியா அய்யப்பன், செல்வராகவன், நட்டி நடித்துள்ள படம், ‘சொர்க்கவாசல்’. பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் எழுதியுள்ளனர். ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளன‌. வரும் 29ம் தேதி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு வெளியிடுகின்றனர். இப்படத்தின் டிரைலரை அனிருத், லோகேஷ் கனகராஜ் வெளியிட்டனர்.

அப்போது ஆர்ஜே பாலாஜி பேசியதாவது: படக்குழுவினரின் மீதுள்ள நம்பிக்கையால், இதுவரை இப்படத்தை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. இதில் என்னை அவர்கள் வேறொரு பரிமாணத்தில் காட்டியிருக்கின்றனர். ஒரு படம் நன்றாக இருந்தால், அதற்கு மக்கள் தானாகவே வரவேற்பு கொடுப்பார்கள். ஒரு பிஸ்கட் பாக்கெட்டை உற்பத்தி செய்கிறோம். அது கடைக்கு வந்ததும், அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, ‘நன்றாக இருக்கிறது’ அல்லது ‘மோசமாக இருக்கிறது’ என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எல்லா நடிகர்களின் ரசிகர்களும் எல்லா படத்தையும் பாருங்கள். பிடிக்காத விஷயங்களை சொல்லுங்கள். ஆனால், யாரையும் டார்கெட் வைத்து தாக்கி, உங்களின் எனர்ஜியை வீணாக்காதீர்கள்.

Tags : RJ Balaji ,CHENNAI ,Siddharth Vishwanath ,Sania Ayyappan ,Selvaraghavan ,Natty ,Prince Anderson ,Christo Xavier ,Ashwin Ravichandran ,Swipe Right Studios ,Think… ,
× RELATED ரொம்ப காண்டா இருக்கு! - Selvaraghavan Speech at Sorgavaasal Trailer Launch | S.R. Prabhu | RJ Balaji