×

பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் டோலிவுட் நடிகர்கள்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்கள். அது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. பிரபலங்கள், தொழில் அதிபர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருப்பார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் 8 நடிகர்கள் தங்களுக்கென தனி விமானம் வைத்துள்ளனர். அதில் அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், பவன் கல்யாண், ராம் சரண், நாகார்ஜுனா மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் முக்கியமானவர்கள்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது இந்த தனி விமானத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேபோல் குடும்பத்துடன் ஹாலிடே டூர் செல்லும்போதும் இந்த தனி விமானங்களில் செல்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த விமானங்களை வாடகைக்கும் விட்டு பணம் பார்க்கிறார்கள். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவுக்கு மட்டுமே இதுபோன்ற விமானம் இருக்கிறது. பாலிவுட்டில் 20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளிடம் தனி விமானம் உள்ளது.

Tags : Tollywood ,Hyderabad ,Allu… ,
× RELATED வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்...