×

பான் இந்தியா படமாக நாளை வெளியாகிறது மேக்ஸ்

சென்னை: கிச்சா சுதீப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மேக்ஸ் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மேக்ஸ்’ படத்தில் கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுனில், சரத் லோகித்ஸவா, ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். ஆக்‌ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். நாளை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் படம் வெளியாகும். இந்த திரைப்படத்தினை தமிழில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி, ஆர்.வி. உதயகுமார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையை சார்ந்த காட்ரகட்ட பிரசாத், நடன இயக்குநர் ஷோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : India ,Chennai ,Kichcha Sudeep ,Vijay Karthikeya ,Varalakshmi Sarathkumar ,Samyuktha Hornadt ,Sunil ,Sarath Lokitsava ,Aadukalam' Narain ,
× RELATED Pls கிழிச்சு தொங்கவிட்றாதீங்க ! Mysskin Speech at Max Movie Press Meet | Kichcha Sudeep