×

அல்லு அர்ஜுன் வழக்கால் அப்செட் சினிமாவை விட்டு விலக புஷ்பா 2 இயக்குனர் முடிவு

ஐதராபாத்: அல்லு அர்ஜுன் வழக்கால் அப்செட் ஆகியிருப்பதாகவும் சினிமாவை விட்டே விலகிவிட நினைப்பதாகவும் ‘புஷ்பா 2’ பட இயக்குனர் சுகுமார் கூறியுள்ளார். ‘புஷ்பா 2’ படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. இதை முன்னிட்டு 4ம் தேதி இரவு நடந்த சிறப்பு படக்காட்சிக்காக அல்லு அர்ஜுன், ஐதராபாத் சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் போலீஸ் நடத்திய விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமாரும் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளர் நீங்கள் விட்டு விலக நினைப்பது எதை? என சுகுமாரிடம் கேட்டார். உடனே சினிமா என சுகுமார் பதிலளித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இது குறித்து சுகுமாரிடம் கேட்டபோது, ‘தியேட்டரில் ரேவதி என்ற பெண் பலியானது எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பெரும் மனவலியை தந்தது. அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் எனக்கு மனஉளைச்சலை தந்துள்ளது. அதனால்தான் சினிமாவிலிருந்து விலக நினைக்கிறேன்’ என்றார்.

Tags : Allu Arjun ,Hyderabad ,Sukumar ,
× RELATED வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்...