×

ஃபேன்டசி காதல் கதையில் ரஜித்

சென்னை: அறிமுக இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதையின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். 1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குனர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார். இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு, ஷீன் எல்.க்ளஃபோர்ட் இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு.

 

The post ஃபேன்டசி காதல் கதையில் ரஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajit ,Chennai ,Veeje ,Meenakshi Sundaram ,Rajith ,Jude Anand.Day ,Black and White Media Solutions Pvt Ltd.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...