×

முத்தக் காட்சியில் நடித்த காயத்ரி ஷான்

சென்னை: அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கியுள்ள படம் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரி ஷான் நடித்துள்ளனர். இவர்களின் லிப் லாக் முத்தக் காட்சி பரபரப்பா பேசப்படும் என்கிறார் இயக்குனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.முருகன் தயாரித்துள்ளார்.ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பி.சி.சிவன். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் வித்து ஜீவா.

Tags : Gayathri Shaan ,Chennai ,Vignesh Pandian ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...