- அண்ணாமலை
- அன்புமணி
- வி.நாராயணன்
- இஸ்ரோ
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- பா.ம.க.
- நாராயணன்
- சோமநாத்
- இஸ்ரோ...
- தின மலர்
சென்னை: இஸ்ரோவின் புதிய தலைவரான நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோமநாத்தின் பதவிக்காலம் ஜன.14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக நாராயணன் பணியாற்றி வருகிறார். வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக பெறுப்பேற்கவுள்ள நாராயணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி வி.நாராயணன், இந்தியாவின் கிரையோஜெனிக் எந்திர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். சந்திரனின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெறவைத்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் வி.நாராயணனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post இஸ்ரோவின் புதிய தலைவரான வி.நாராயணனுக்கு அண்ணாமலை மற்றும் அன்புமணி வாழ்த்து..!! appeared first on Dinakaran.