×

பொங்கல் விடுமுறையை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: 2025 பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.01.2025 வரை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்; 14.01.2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள் / பகுதிக்கு மாநகர் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.

The post பொங்கல் விடுமுறையை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Transport Corporation ,Chennai ,Pongal 2025 ,Municipal Transport Corporation ,Managing Director ,Pongal festival ,Dinakaran ,
× RELATED பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம்...