×

கல்லூரி மாணவி மாயம்

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் மகள் யுவ (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி வீட்டில், வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பத்மநாபன் எழுந்து பார்த்தபோது, யுவயை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dharmapuri ,Padmanaban ,Yuva ,Kelavalli ,Kambainallur ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்