×

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

 

திருச்சி, ஜன.10: கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் செயலர் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பிரம்ம ஞானம் தருமச்சாலை நிறுவனர் தவத்திரு அறம் மிகு அடிகளார் மற்றும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிறுவனர் சேக் அப்துல்லா மற்றும் திருச்சி ஆயரின் தனிச்செயலாளர் அருள்பணி. பிரிட்டோ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாணவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நாட்டுப்புற நடனம், பறை இசை, மக்களிசைப் பாடல்கள், கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து சேக் அப்துல்லா பன்மைத் துவத்தை சமத்துவத்தை கொண்டு வருகின்ற தமிழர் திருநாள் உலக மக்களுக்கு மனித நேயத்தையும் உயிர் ம நேயத்தையும் அன்பையும் அறத்தையும் போதிக்கிறது. இத்திருநாளில் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் என்று சிறப்புரையாற்றினார். பின்னர் அருள் பணி. பிரிட்டோ பிரசாத் அடிகளார் இயற்கையை மானுடத்தை உழைக்கும் உழவர்களை விளைச்சலை உருவாக்குகின்ற கால்நடைகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்ற திருநாள் அனைவருக்கும் நன்மை, வளமை இனிமை பெருக பொங்கட்டும் என்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்லூரியின் செயலர் தந்தை ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மிருதங்கத்துறை தலைவர். மூர்த்தி அவர்கள் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர்கள், மாணவியர்கள் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.

The post கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Pongal Festival ,Kalaikaviri ,College ,of Fine ,Arts ,Trichy ,Fine Arts ,Luis Brito ,Principal Doctor ,Natarajan ,Brahma Ghanam Darumachalai ,Founder ,Thwathru ,Samathuwa Pongal Festival ,Kalaikaviri College of Fine Arts ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கியில் சமத்துவ பொங்கல் விழா