- நிலை இடைநிலை பள்ளி
- தஞ்சாவூர்
- நிலை இடை-
- சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளை
- தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கட் சங்கம்
- சச்சின்
- ஜெய்
- -கிட்டு
- நினைவு
- தின மலர்
தஞ்சாவூர், ஜன.10: தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ‘‘சச்சின் ஜெய் -கிட்டு நினைவு கோப்பை-2024” -க்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் பீட்டர்ஸ் பள்ளி மைதானம் மற்றும் கிட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் காளிதாஸ் வாண்டையார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 9 பள்ளி அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இறுதிப்போட்டி நாளை (11ம் தேதி) காலை நடைபெற உள்ளது. சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகத் தாளாளர் பாலாஜி நன்றி கூறினார்.
The post தஞ்சாவூரில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.