×

திருவிடைமருதூர் அருகே வண்ணக்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வளர்ச்சி குழு ஆய்வு

 

திருவிடைமருதூர், ஜன.10: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வண்ணக்குடி ஊராட்சியில், ஊராட்சி பதிவேடுகள் மற்றும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஐதராபாத் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவன மாநிலத் தர கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். வண்ணக்குடி ஊராட்சியில் குறிப்பாக ஊராட்சி செயலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள், அங்கன்வாடி, ஊராட்சி மன்ற தலைவர் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் முனைவர் கஸ்தூரி கார்த்தி, மாவட்ட ஊராட்சிகளின் வள மைய அலுவலர் திரு. ராமு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பகவதி, வட்டார சுகாதார ஆய்வாளர் திரு. குபேந்திரன் மற்றும் ஊராட்சி செயலர் ஜீவாமேரி மகளிர் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருவிடைமருதூர் அருகே வண்ணக்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வளர்ச்சி குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : National Rural Development Committee ,Vannakudi panchayat ,Thiruvidaimarudur ,Panneerselvam ,National Rural Development Corporation ,Hyderabad ,Vannakudi ,Thanjavur ,Dinakaran ,
× RELATED ஏனாநல்லூர் நோய், பூச்சி தாக்கப்பட்ட...