×

பிரச்சனைக்கு தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்க நகர பகுதிகளுக்கு வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்காக, பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், திருக்கழுக்குன்றம் – நெரும்பூர் இடையே 45க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த, ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் இரு தரப்பாக பிரிந்து, பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த, பிரச்னையை சரிசெய்து இரு தரப்பினருக்குமிடையே சுமூக நிலையை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கு ஒரு தரப்பினர் கோரிக்கை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் ஒரு தரப்பை சேர்ந்த (புகார் கொடுத்த) ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் முன்னிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பிரச்சனைக்கு தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirukkazhukundram ,Dinakaran ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே மேளம்...