×

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி: கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் இணைந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக்கோரி கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏஐசிடபிள்யூஎப் மாநில துணை தலைவர் ஆபிரகாம் தலைமை தாங்கினார்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், ஏஐசிசிடியு மாவட்ட துணை தலைவர் தினேஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் பாலாஜி, வழக்கறிஞர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஏஐசிசிடியுவின் மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன் கலந்துகொண்டு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Communist Party ,Tamil Nadu Democratic Construction Workers' Association ,Tamil Nadu Democratic General Workers' Association ,Communist ,Dinakaran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்