திருப்போரூர்: திருப்போரூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு, ரூ.26.83 லட்சத்தில் புதிய கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செங்கல்பட்டு சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொது நிதியின் கீழ் கடந்த 2023ம் நிதியாண்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்ட ரூ.26 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் கட்டுமானப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்து கடந்த வாரம் வருவாய்த்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. விரைவில் புதிய கட்டிடத்தில் திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருப்போரூரில் ஆர்ஐ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.