- சட்டமன்ற உறுப்பினர்
- வரலட்சுமி மதுசூதனன்
- நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- குடவாஞ்சேரி
- கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை
- செங்கல்பட்டு மாவட்டம்...
- தின மலர்
கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், மாணவர்களின் வருகையை ஏற்று செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட மாநில தொடர்பு அலுவலர் தயாளன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு ரூ.15 லட்சம் நிதியில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். இதில், வார்டு கவுன்சிலர்கள் ஜெயந்திஜெகன், ரவி, சதீஷ்குமார், நக்கீரன், டில்லி, ஸ்ரீமதிராஜி, சசிகலாசெந்தில், நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் appeared first on Dinakaran.