×

மிருகசீரிடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு ஐந்தாவது வரக்கூடிய நட்சத்திரம் இந்த மிருகசீரிடம் ஆகும். இந்த நட்சத்திரம் உடைபட்ட நட்சத்திமாக உள்ளது. அதாவது ரிஷபத்திலும் மிதுனம் தொடர்ந்து பரவியிருக்கிறது. இந்த நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரமாக உள்ளது. இதில் உள்ள அதிசயம் என்னவென்றால் செவ்வாய் ரிஷபத்திலும் மிதுனத்திலும் இருப்பது இருவேறு வகையான அமைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. நட்சத்திரக் கூட்டத்தில் மூன்று வரிசையாக தெரியக்கூடிய கூட்டத்திற்கு மான்றலை என்று பெயர். இதற்கு மிருகசீரிடம் என்று நட்சத்திரமாகும். மான்றலை என்பதற்கு மானின் தலை பொருள்படுவதாகும். இதனை மிருகம் என்றால் விலங்கு என்றும் சிரிஷம் என்பதனை தலை என்பதாகும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்தவர் பரசுராமர். இவரே விஷ்ணு அவதாரமாக இருக்கிறார். வீரத்திற்கு இலக்கணமானவர். இந்த செவ்வாய்க்கு அதிபதியான நட்சத்திரம் மிதுனம் வீட்டில் இருக்கும் தொடர்பை பரசுராமராக எடுத்துக்கொள்ளலாம்.

மிருகசீரிட நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் மான்றலை, ஐந்தானம், மார்கழி, மதிபேராளன், நரிப்புறம் ஆகியன.
மிருகசீரிடம்- விருட்சம் : கருங்காலி
மிருகசீரிடம் – யோனி : பெண் சாரை
மிருகசீரிடம் – பட்சி : கோழி
மிருகசீரிடம் – மலர் : ஜாதிமல்லி
மிருகசீரிடம் – சின்னம் : மானின் தலை
மிருகசீரிடம் அதிபதி : செவ்வாய்
மிருகசீரிடம் – அதி தேவதை : சிவன்
மிருகசீரிடம் கணம்: : தேவ கணம்

மிருகசீரிட புராணம்

ஆதிசங்கரர் சிரகசன் என்னும் வேடனிடம் தன்னை நரபலியாக தருவதற்கு சம்மதித்து அவனுடன் சென்றார். அவ்வாறு அவனுடன் செல்லும் வாக்கு தவறாமல் இருப்பதற்கு கதை ஒன்றை சொன்னார். ஒரு நாள் காட்டில் ஆண் மான் ஒன்று வேடன் ஒருவனிடம் சிக்கிக் கொண்டது. அப்பொழுது அந்த மான் ‘என் மனைவி (பெண் மான்) காத்திருப்பாள். அவளை பார்த்துவிட்டு வந்து விடுவதாக’ வேடனிடம் அனுமதி கேட்டது. வேடனும் சென்று வந்துவிட வேண்டும் என்பதற்காக கால் பகுதியை காயப்படுத்தி அனுப்பினான். அந்த மானும் பெண் மானை சந்தித்து முழு விசயத்தை தெரிவித்து குழந்தைகளான குட்டி மான்களுடன் வேடனிடம் வந்து சேர்ந்தன. தங்களின் உயிரை ஏற்க வேண்டின. வேடன் அவ்வுயிர்களின் வாக்கு தவறாமை, நேர்மை, அன்பு ஆகியவற்றை கண்டு குற்ற உணர்வால் வருந்தினான். சிவபெருமான் காட்சி தந்து அந்த மான்களுக்கு நட்சத்திரமாக மாறுவதற்கு வரம் அளித்தார். அதுதான் மிருகசீரிடம் என்ற நட்சத்திரமாகும்.

பொதுப்பலன்கள்

இது செவ்வாயின் நட்சத்திரமாக இருப்பதால் மிகவும் வேகமாகவும் துணிவு உடையவராகவும் இருப்பார்கள். சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பா். உணவு விஷயத்தில் கொஞ்சம் காரமான உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். ரசம் அதிகம் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். யார் என்ன சொன்னாலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.

மிருகசீரிடம் உடைபட்ட நட்சத்திரமாக இருப்பதால் ஜாதகர் இரட்டைத் தன்மை உள்ள குணம் உள்ளவராக இருப்பார். எண்ணங்களும் சிந்தனைகளும் அப்படித்தான் இருக்கும்.

காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகத்தில் உள்ள வலிமையான நட்சத்திரம் காலபுருஷனின் அதிபதி செவ்வாய் இந்த நட்சத்திரத்திற்கும் அதிபதியாக இருப்பதாலும் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதாலும் இந்த நட்சத்திரக்காரர்களின் வாக்கு பலிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்கள் எப்படி படிப்பார்கள் என்பது தெரியாது. இவர்களின் கல்வி அர்த்தமுள்ளதாக இருக்கும்.

கலகலப்பானவர்கள், கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பர். தன்னை எப்பொழுதும் மற்றவர்களுள் பெரிதுபடுத்திக் காட்டிக் கொள்ளும் எண்ணம் இருக்காது. அவையடக்கமாக இருப்பார்கள். தொழில் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல்துறை வித்தகர்களாக இருப்பர். ஆகவே, இவர்கள் தங்கள் தொழிலை வித்தியாசமாக செய்து ஆச்சர்யத்தில் முழ்கடிப்பர். இவர்களுக்கென்று தனிபாணி உண்டு. அதன்படிதான் இவர்கள் தொழில் செய்வர். வேகமாகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் செய்வதில் வல்லவர்கள். இவர்களுக்கு நிகர் இவர்களே. இவர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள்.

ஆரோக்கியம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேகமாக இருப்பர். ஆகவே, தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். 60 வயதிற்கு மேல் கொஞ்சம் தங்கள் நலனில் அக்கறையுடன் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உழைப்பு, உழைப்பு என்று தொடர்வதால் ஆரோக்கியத்தை தள்ளி வைத்துவிடுவர். ஆகவே, கவனம் தேவை,

மிருகசீரிடத்தின் வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தும் நட்சத்திரமாகும்.

மிருகசீரிடத்தின் வெற்றி நட்சத்திரம்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

மிருகசீரிட நட்சத்திர பரிகாரம்

மதுரை அருகே உள்ள குருவித்துறை குருபகவானை வியாழக்கிழமை சென்று வழிபடுங்கள் உங்களின் வெற்றிக்கான வழிகாட்டியாக அமையும். மஞ்சள் வஸ்திரம் அல்லது பச்சை நிற வஸ்திரத்துடன் வழிபடுங்கள்.

The post மிருகசீரிடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.

Tags : Aries ,Mars ,Sagittarius ,Pentecost ,
× RELATED தனுசு