×

நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை செக்மேட் செய்த காதலி: பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

ஓஸ்லோ: நார்வேயை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், தன் நீண்ட நாள் காதலி எல்லா விக்டோரியாவை திருமணம் செய்து கொண்டார். நார்வே செஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் (34), சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் எல்லா விக்டோரியா மெலோனியை (26) காதலித்து வந்தார். எல்லாவின் தாய் நார்வே நாட்டவர். தந்தை அமெரிக்கர். நார்வேயின் ஓஸ்லோவிலும், அமெரிக்காவிலும் படித்தவர்.
கார்ல்சனுக்கும், எல்லாவுக்கும் நார்வேயின் ஓஸ்லோ நகரில் உள்ள ஹோல்மென்கோலன் சர்ச்சில் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கார்ல்சன் பிரம்மாண்ட விருந்து அளித்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல வீடியோ ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்சை சேர்ந்த குழுவினர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், கார்ல்சனின் திருமணத்தை படம் பிடித்து நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பு செய்ய வந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஃபிடே உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் 5 முறை உலக ரேபிட் சாம்பியன் பட்டத்தையும், 8 முறை உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தையும் இவர் வென்றுள்ளார்.

The post நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை செக்மேட் செய்த காதலி: பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.

Tags : Carlsen ,Oslo ,Magnus Carlsen ,Norway ,Ella Victoria ,Singapore ,
× RELATED உலக செஸ் பிளிட்ஸ் ஓபன் பிரிவில்...