தேனி, ஜன. 5: தேனி நகர் பழைய அரசு மருத்துவமனை சாலையில் குடியிருப்பவர் ஜெயக்குமார் மனைவி கலைச்செல்வி (42). இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு ஞானபிரகாஷ் (24), பிரவீன் குமார் (22) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஞானபிரகாஷ் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மது அருந்துவதற்காக ஞானபிரகாஷ் பணம் கேட்டபோது கலைச்செல்விமறுத்ததால் கத்தியால் குத்த முயன்றார். அப்போது தடுக்க வந்த அவரது தம்பி பிரவீன் குமாரை கத்தியால் குத்தியதால் அவர் காயமடைந்தார். இதுகுறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரின் தேனி போலீசார் ஞானபிரகாஷை கைது செய்தனர்.
The post தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது appeared first on Dinakaran.