×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல், ஜன.8: நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, வட்டார போக்குவரத்துதுறையினர், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல், நித்யா, எஸ்ஐ பாலு ஆகியோர், அந்த வழியாக டூவீலரில் சென்றவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிந்து டூவீலரை இயக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டுபிரசுரங்களை வழங்கினர். சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என வலியுறுத்தினர். முகாமின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 38 வாகன ஓட்டுனர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Safety Awareness Camp ,Namakkal ,National Road Safety Month ,Regional Transport Department ,Highways Department ,Nallipalayam ,Namakkal North ,South Regional Transport… ,Safety ,Awareness Camp ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?