×

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் செங்கம் அருகே

செங்கம், ஜன. 8: செங்கம் அருகே எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான எருது விடும் விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இந்த பாரம்பரிய எருது விடும் விழாவில் கோயில் காளையை முதலில் களம் இறக்கி அதன் பின்னர் உள்ளூர் காளைகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500 காளைகள் சீறிப்பாய்ந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் தலைமை தாங்கினார். மேலும் எருதுகளின் கொண்டைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை காண மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். புதுப்பாளையம் போலீசார் பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டனர்.

The post எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் செங்கம் அருகே appeared first on Dinakaran.

Tags : raising ,Chengam ,Tamils ,Karapattu ,Pudupalayam ,Tiruvannamalai district ,Pongal festival… ,Dinakaran ,
× RELATED திருமணமான 7 மாதத்தில் பெண் போலீசின் கணவர் தூக்கிட்டு தற்கொலை