சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பேரவையில் உரை நிகழ்த்த கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டம் 174/1 கீழ் தமிழக சட்டமன்ற கூட்டத்தை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வருகிற 6ம் தேதி (திங்கள்) கூட்ட உள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த 20ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேரடியாக சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, வருகிற 6ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் உரைநிகழ்த்த வரும்படி சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆளுநர், வருகிற 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் உரையாற்றுகிறார்.
The post வருகிற 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு appeared first on Dinakaran.