×

யானைகளை சாடிவயலுக்கு மாற்றும் திட்டம்: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை சாடிவயல் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மைய நிறுவனர் முரளிதரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்க செயல்பாட்டு வழிகளை வகுக்கக் கோரியும், எம்.ஆர்.பாளைய யானைகளை ஒன்றிய அரசு அனுமதி இல்லாமல் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், யானைகள் மறுவாழ்வு மையத்தில் நீர் பற்றாக்குறை நிலவுவதால் சாடிவயல் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாடிவயல் முகாமுக்கு பெறப்பட்ட அனுமதி குறித்தும், யானைகளின் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post யானைகளை சாடிவயலுக்கு மாற்றும் திட்டம்: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,ICourt ,Trichy Elephant Rehabilitation Centre ,Sadiwal Camp ,Indian Animal Rights and Education Centre ,Muralitharan Icourt ,Sadiwal ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்: தமிழ்நாடு அரசு