- யூஜிசி
- முதல் அமைச்சர்
- கவர்னர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பல்கலைக்கழக மானியக் குழு
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவுசெய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய வீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரால் பரிந்துரைக்கப்படுபவர் குழுவின் தலைவராகவும் உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பர். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார். புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கல்வித்துறை சாராதவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டப்படி கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் தன்னிச்சையாக யுஜிசி விதிகளை மாற்ற முடியாது. விதிகளை தன்னிச்சையாக மாற்றுவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. பல்கலைக்கழக மானியக் குழு தனது எல்லைகளை தாண்டி செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
யு.ஜி.சி. விதிகளை திருத்தியதை எதிர்த்து சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு அரசு போராடும். தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதை வாய்மூடி பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரமான முடிவு மையத்தில் அதிகாரங்களை குவிக்க வழிவகுக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்கும் செயல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post யுஜிசி விதிகளை திருத்தியது சட்டவிரோதம்: ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.