×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஜன.10-ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிகேணியில் பார்த்தசாரதி கோயிலில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பரமபதவாசல் கட்டணச்சீட்டு தனிநபர் ஒருவருக்கு ரூ.500, ஆதார் அட்டை நகல் கொடுத்து கட்டணச்சீட்டை பெற்று கொள்ளலாம்.

நாளென்றுக்கு 1,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

2025ம் ஆண்டில் வரும் முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜனவரி 09ம் தேதி பகல் 12.04 மணிக்கு துவங்கி, ஜனவரி 10ம் தேதி காலை 10.02 மணி வரை ஏகாதசி திதி உள்ளது. அனைத்து விரதங்களிலும் மிகவும் உயர்வான விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். பெருமாளின் அருளை பெற வேண்டி கடைபிடிக்கப்படும் ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி திதியில் துவங்கி, துவாதசி திதியில் நிறைவு செய்ய வேண்டிய விரதம் ஆகும்.

பாவங்களை போக்கி, மோட்சத்தை தரும் விரதம் ஏகாதசி விரதம். வாழும் போதே அளவில்லாத ஏராளமான நல்ல பலன்களை தரும் விரதமும் ஏகாதசி விரதம் தான். துன்பம் தீர, வெற்றி கிடைக்க, செல்வம் சேர, நோய்கள் நீங்க என என்ன பிரச்சனை தீர வேண்டும் என்றாலும் ஏகாதசி விரதம் இருக்கலாம்.

திதிகளில் 11 வது திதியாக வரும் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை என, வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இந்த அனைத்து ஏகாதசி விரதங்களையும் கடைபிடிக்க முடியாதவர்கள் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை மனதார வழிபட்டாலே வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலனையும், பெருமாளின் அருளையும் பெற்று விடலாம். அப்படி அளவில்லாத பல நன்மைகளை தரக் கூடிய ஏகாதசி தான் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி.

மார்கழி அமாவாசையான அனுமன் ஜெயந்திக்கு பிறகு வரும் 11 வது நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசிகளிலேயே மிகவும் உயர்வான பலனை தரக் கூடிய ஏகாதசியாக இது கருதப்படுகிறது. பாவங்களை நீக்கி, பிறப்பு-இறப்பு இல்லாத மோட்ச நிலையை தரக் கூடிய விரதம் என்பதால் இதற்கு மோட்ச ஏகாதசி என்றும் பெயர். இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, இரவு கண் விழித்து பரமபத வாசல் எனப்படும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தாள் மோட்சத்திற்கு செல்வதற்கு வழி பிறக்கும் என்பது நம்பிக்கை.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : VAIGUNTA EKADASI ,MINISTER ,SEKARBABU ,Chennai ,Vaikunda Ekadasi ,Sekharbhabu ,Parthasarathi Temple ,Thiruvallikeni, Chennai ,
× RELATED வங்கியில் வைப்பு நிதியாக...