திருவாடானை, ஜன.1: திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கு பல நாட்களாக பழுதடைந்து உள்ளது. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விளக்கு எரியாமல் பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் இரவு நேரத்தில் இங்கு வரும் பக்தர்கள் பெரும்பான்மையாக இந்தப் பகுதியில் தான் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வார்கள். இதனால் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்ப வந்து வாகனத்தை எடுக்க முயற்சிக்கும் போது இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது.
மேலும் இந்த விளக்கு அருகே கோயில் தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் படித்துறையில் பக்தர்கள் நிறைய பேர் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இரவு நேரத்திலும் கூட இங்கு பக்தர்கள் குளித்து செல்வார்கள். அவ்வளவு முக்கியமான இந்த பகுதியில் இந்த ஹைமாஸ் விளக்கு பழுதடைந்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக பழுதான இந்த ஹாமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இருள் சூழ்ந்து இருப்பதால் ஹைமாஸ் விளக்கு பழுதை நீக்க கோரிக்கை appeared first on Dinakaran.