கறம்பக்குடி, ஜன. 5: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் மேல்நிலை பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு தொழில் கல்வி பிரிவில் வேளாண் அறிவியல் 12ம் வகுப்பு பயிலும் 72 மாணவ, மாணவிகள் கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாள விடுதி மாநில எண்ணெய் வித்து பண்ணைக்கு அகப்பயிற்சி காக சென்றனர்.அங்கு மாநில எண்ணெய் வித்து பண்ணையில் நடைபெறும் நிலகடலை, எள், உளுந்து, சணல் பயிர் போன்றவைகள் பற்றியும் பல்வேறு எண்ணெய் வித்து பண்ணை விவசாய முறைகளையும் பார்வையிட்டு அங்குள்ள வேளாண் அலுவலர்களிடம் அதன் முறைகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.
இந்த அக பயிர் முகாமில் மழையூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜ், உதவி தலைமை ஆசிரியர் வீரப்பன், பள்ளியின் வேளாண் தொழிர் கல்வி ஆசிரியை பிரதீபா ஆகியோர் தலைமை யில் மாணவ,மாணவிகள் வெள்ளாள விடுதி மாநில எண்ணெய் வித்து பண்ணைக்கு சென்று விவசாயம் சம்மந்தமான அகப்பயிற்சிகளை தெரிந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அக பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் எண்ணெய் வித்து பண்ணை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post கறம்பக்குடி அருகே வெள்ளாளவிடுதி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் அக பயிற்சி 12ம் வகுப்பு தொழில் கல்வி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.