×

அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

சிங்கம்புணரி, டிச.25: சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையாசிரியர் கஸ்தூரி தலைமை வகித்தார். மேலாண்மைக் குழு தலைவர் பாகம்பிரியாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ஆசிரியர் முத்துப்பாண்டியன் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

கூட்டத்தில் பள்ளி தொடங்கி 136 வருடங்களை கடந்து விட்டதால் பள்ளிக் கல்வி துறை சார்பில் மாவட்டத்திலேயே பிரான்மலை ஆரம்பப்பள்ளியை தேர்ந்தெடுத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்களிப்புடன் நூற்றாண்டு விழா ஜனவரி மாதம் 30ம் தேதி நடத்த வேண்டும். பள்ளியில் குரங்குகளால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள் பொன்னழகு, இந்திரா, நீலாவதி, தன்னார்வ ஆசிரியர்கள் கார்த்திகா, சூர்யா, பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parent-Teacher Meeting ,Singampunari ,Pranamala Panchayat Union Primary School ,Headmaster ,Kasthuri ,Management Committee ,Bhagambiriyal ,Teacher ,Saravanan ,Muthupandian… ,Dinakaran ,
× RELATED மாவட்ட குத்துச்சண்டை போட்டி...