×

கும்பகோணம் வடக்கு கோட்டம் பகுதி மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்

 

கும்பகோணம், ஜன.5: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம் மின்வாரிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மின் விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் வந்து தெரிவித்து பயனடையலாம்.இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கும்பகோணம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

The post கும்பகோணம் வடக்கு கோட்டம் பகுதி மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam North Zone ,Kumbakonam ,Tamil Nadu Electricity Generation and Distribution Corporation ,Dinakaran ,
× RELATED பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி தின மகா அபிஷேகம்