×

புதுக்கோட்டை நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை,டிச.31: புதுக்கோட்டை நகரில் உள்ள  ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதி பெரிய மார்க்கெட்யில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலையில் பால் குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

பின்னர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.  ஆஞ்சநேயர் வெள்ளிக்கவசம், வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயிலில் உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார். இதில் பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்புடன் செய்தனர்.

The post புதுக்கோட்டை நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Hanuman Jayanti festival ,Anjaneyar Temple ,Pudukkottai ,Pudukkottai South 4th Street Big Market ,Hanuman Church ,
× RELATED கறம்பக்குடியில் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா