- அனுமன் ஜெயந்தி விழா
- அஞ்சநேயர் கோயில்
- கரம்பாக்குடி
- அக்ரஹாரம்
- புதுக்கோட்டை
- இறைவன்
- அனுமன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கறம்பக்குடி,டிச.31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அக்ரஹாரம் பகுதியில் ஆஞ்சநேயர்கோயிலில் வாரம் தோறும் சனிக்கிழமை நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் அனுமார் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து அனுமனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் காலை முதல் மாலை வரை கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த அனுமன் பக்தர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அனுமாருக்கு வடை மாலை மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
மேலும் அனுமன் ஜெயந்தி விழாவின் முத்தாய்பாக அனுமார் கோவில் ஆலைய திருப்பணி குழுவினர் மற்றும் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானத்தையும் வழங்கினர். இந்த அன்னதான விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
The post கறம்பக்குடியில் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.